Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ், எம்.எம்.அஹமட் அனாம்
மத்திய நீர்பாசனத் திணைக்களத்தின் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்படவுள்ள கிரான்புல்சேனை அணைக்கட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.
1957ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்புற்ற இவ்வணைக்கட்டானது, அதன் பின்னர் விவசாய நடவடிக்கைகளுக்கு ஏதுவான நிலையில் இல்லாமல், வருடா வருடம் பல மில்லியன் ரூபாய்கள் செலவில் மண் கட்டுகளாகப் புதுப்பிக்கப்பட்டு வந்தது.
கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன், மத்திய நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி செய்சா, கிழக்கு மாகாண முதலமைச்சர் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .