2025 மே 01, வியாழக்கிழமை

அதிக விலைக்கு விற்பனை; வியாபாரிகளுக்கு வழக்கு

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகளை விற்பனை செய்த எட்டு வியாபாரிகளுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை போன்ற பகுதிகளில் பொதுமக்களால் நுகர்வோர் அதிகார சபையிக்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக நடைபெற்ற விசாரணைகளின் போதே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி எட்டு வியாபாரிகளுக்கு எதிராக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்  வழக்கு, நாளை மறுதினம் (25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி ஒரு கிலோகிராம் 500 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டுமென நிர்ணய விலை உள்ள போதும், மேற்படி வர்த்தகர்கள் 650 ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் இதனை விசாரிக்கச் சென்ற போது கடமையை செய்வதற்கு இடைஞ்சலாக வார்த்தைப் பிரயோகங்கள் செய்ததாகவும், வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .