Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பேரினவாத மமதை மூலமன்றி, அரசியல் அதிகாரப் பகிர்வின் மூலமே, இந்த நாட்டில் வாழும் பல்லினச் சமூகங்களையும் இணைப்பதற்கான வழிவகை செய்யப்பட வேண்டுமென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
சமகால அரசியல் முன்னெடுப்புகளும் சிறுபான்மையினரின் அரசியல் அந்தஸ்தும் குறித்து, முன்னாள் முதலமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையில் இன, மத, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள், மலையகத் தமிழர்கள், மலாயர்கள், வேடுவச் சமூகத்தினர் உட்பட அனைத்துச் சிறுபான்மைச் சமூகங்களையும் சேர்ந்த மக்களது நம்பிக்கையை, நாட்டை ஆளும் அரசாங்கம் பெற்றாக வேண்டுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அதற்குத் தோதான விட்டுக்கொடுப்புகளுக்கு, அரசியல்வாதிகள் தயாராகவும் வேண்டுமென்றும் நாட்டு மக்கள், இன, மத, மொழி வேறுபாடின்றி, எப்போதும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் தாம் இருக்கிறோமென உணர்கிறார்களோ, அப்போது தான், இலங்கையில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுமென்றும், நஸீர் அஹமட் கூறியுள்ளார்.
அரசியல் அதிகாரங்களில் கோலோச்சியவர்களும் ஆயுத பலத்தைக் கொண்டிருந்தவர்களும், சிறுபான்மைச் சமூகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதால் உண்டான அழிவு தரும் விளைவுகளை, இந்நாடு அனுபவித்திருக்கின்றதெனக் குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறான துரதிர்ஷ்ட நிலை, இனியும் தொடரக்கூடாதென வலியுறுத்தியுள்ளார்.
சிறுபான்மையினரின் மனங்களில், மேலும் அச்சமும் பீதியும், நிம்மதியற்ற சூழ்நிலையும் ஏற்படா வண்ணம், புதிய அரசமைப்பின் அதிகாரப் பகிர்வு ஊடாக, நிரந்தரமான அரிசியல் தீர்வு எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த நாட்டில், சிறுபான்மை மக்களான முஸ்லிம் மற்றும் தமிழ்ச் சமூகத்தினரும் பெரும்பான்மை மக்களில் கணிசமானோரும், ஒரு போதும் நல்லிணக்கத்துக்குத் தடையானவர்களாக இருப்பதில்லை என்றும், கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம், நல்லிணக்கத்தை வென்றெடுக்க வேண்டுமாயின், முதலில் மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டுமெனவும் அதற்கு முன்னதாக, சட்ட ஆட்சியும் நீதியும் நிலைநிறுத்தப்பட வேண்டுமென்றும், ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மக்கள் நடத்த வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்காத வண்ணம், சமத்துவமானதும் பாரபட்டசமற்றதுமாகப் பகிர்ந்தளிக்கப்பட்ட அரசியல் அதிகார அரசாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றும், அவர் தனது அறிக்கை ஊடாக வலியுறுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago
3 hours ago