Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கிழக்கு மாகாணத்திலுள்ள 45 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் நிலவி வருவதாகவும் அரசியல் தலையீடு காரணமாக இவை நிரப்பப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுவதாகவும் இலங்கை கல்வி நிர்வாக அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக சங்கத்தின் ஏ.எல்.முகம்மட் முக்தார், இன்று (28) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
“கிழக்கு மாகாணத்தில் தரம் இரண்டு பாடசாலைகளில் நிலவி வருகின்ற அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைகளை நடத்தி, உடனடியாக நியமனங்களை வழங்குமாறு எமது சங்கம் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரை கோரியுள்ளது.
“அதிபர் பதவி வெற்றிடமாகியுள்ள 45 தரம் இரண்டு பாடசாலைகளுக்கும் விண்ணப்பம் கோரப்பட்டு, ஒரு வருடமாகியும் இதுவரை நேர்முக பரீட்சை நடத்தப்படாது காலம் கடத்தப்பட்டு வருகிறது.
“இப்பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குரியதாகும். அதன் அடிப்படையிலேயே விண்ணப்பம் கோரப்பட்டது.
“திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை, மூதூர், திருகோணமலை வடக்கு, கிண்ணியா ஆகிய கல்வி வலயங்களில் 17 பாடசாலைகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு, மட்டு. மேற்கு, மட்டு. மத்தி ஆகிய வலயங்களில் 16 பாடசாலைகளிலும் கல்முனை கல்வி மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, திருக்கோவில் ஆகிய கல்வி வலயங்களில் 08 பாடசாலைகளிலும் அம்பாறை வலயத்தில் 04 பாடசாலைகளிலும் அதிபர் பதவிக்கான வெற்றிடங்கள் நிலவுகிறன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago