Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
பைஷல் இஸ்மாயில் / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஓர் அதிபர் கடமையாற்றுகின்ற மூன்று வருட காலப்பகுதியில் அப்பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகளில் தொடர்ந்து பின்னடைவை சந்திக்குமாக இருந்தால், அந்த அதிபர் தானாக பதவி விலகவேண்டும். இது எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும்” என, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிஸாம் தெரிவித்தார்.
கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பான, மருதமுனை பிரதேச அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்கள், பிரதியதிபர்களுக்கான விசேட கலந்துரையாடல், மருதமுனை அல்- ஹம்றா வித்தியாலயத்தில் நேற்று (25) நடைபெற்றபோது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
“அதிபர்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். இருந்தும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியை வெற்றி கொண்டு செல்லக் கூடியவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பாடசாலையை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லலாம்.
“அதுமாத்திரமல்லாமல் அவர்களுக்கு ஏற்படுகின்ற சவால்களை வெற்றிகொள்ளும் ஆற்றல் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
“பாடசாலையின் நிர்வாகம் தனித்துவமானதாக இருக்க வேண்டும். அதனைச் சுற்றியுள்ள அத்தனை வளங்களும் அதிபர்களுக்கு உதவவேண்டும். இந்தக் கட்டமைப்பை அதிபர்கள் உருவாக்காவிட்டால், ஒரு போதும் கல்வியில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது.
“நல்ல மாணவ சமூகம் இருக்கின்றன, சிறந்த ஆசிரியர் வளம் உள்ளன, பெற்றோர்கள் சிறந்த ஒத்துழைப்பை வழங்குகின்றனர். அவ்வாறானால், கல்வி வீழ்ச்சிக்கு யார் காரணம்? அதிபர்களையே நான் குற்றம் சாட்டுவேன்.
“கடலில் அலைகள் ஓய்ந்த பின்பு நீராட நினைப்பவனும், சாலையில் வாகனங்கள் ஓய்ந்த பின்பு வாகனம் செலுத்த நினைப்பவனும் நிர்வாகியாக இருப்பதற்கு தகுதியற்றவன்”.
“பதவிகளை வைத்துக் கொண்டு பாடசாலையின் கல்வியை உயர்த்துவதற்கு உங்களால் முடியவில்லை என்றால், இந்த அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டு சாதிக்கக்கூகூடிய ஒருவர் வருவார். அவர் தரம் உள்ளவராகவும் இருப்பார் அல்லது தரம் இல்லாதவராகவும் இருப்பார்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago