2025 ஜூலை 23, புதன்கிழமை

அத்துமீறிய அடைப்புக்குள் பெயர்ப்பலகை இட்டனர் அதிகாரிகள்

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

 

அத்துமீறி தன்னிச்சைப்படி அரச காணியைக் கையகப்படுத்தி வேலி அடைத்து குடியை அமைத்திருந்த இடத்தில், 'இது அரச காணியாகும் உள்நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது' என்ற பெயர்ப் பலகையை, அதிகாரிகள, நேற்று (02) நாட்டிவைத்தனர்.

ஏறாவூர், மீராகேணி வீதியில் இயற்கை நீர் தேங்கிக் கிடக்கும் சதுப்பு நிலத்தைத் தனி நபரொருவர், தனதாக்கிக் கொண்டு வேலி அடைத்து, அங்கு குடிசையும் அமைத்து வந்துள்ளார்.

விரைந்து செயற்பட்ட அதிகாரிகள், அவ்விடத்துக்கு வந்து அரச காணி பெயர்ப்பலகையை நாட்டிவிட்டு, இதற்குள் உள் நுழைவது தடை என்றும் அறிவித்து விட்டுச் சென்றனர்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகமும், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகமும் ஒன்றிணைந்து அப்பகுதி கிராம உத்தியோகத்தரூடாக இந்நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .