2025 மே 15, வியாழக்கிழமை

அனர்த்த முகாமைத்துவ மேம்பாட்டு குழு நியமனம்

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.றனீஸ்

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவால், மாகாண அனர்த்த முகாமைத்துவ மேம்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இக்குழு, மாகாணத்தின்  அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான நிலைமைகளை முகாமை செய்வதுடன்,  உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளது.

மாகாண உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ அஸீஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழுவில், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட செயலாளர்கள், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்கள், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்திப் பணிப்பாளர் ஆகியோர், அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, தங்குமிட வசதிகளை வழங்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர், உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார்.

அத்துடன், மாகாண சுகாதாரத்துறை, உள்ளூர் அதிகார சபைகளுக்கு, அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பிலும், செயற்பட வேண்டிய விதம் பற்றியும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .