Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில், இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்ற அதேவேளை, மனிதர்களால், ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம் என மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (26) காலை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர், இவ்வாறு தெரிவித்தார்.
2004ஆம் ஆண்டு இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து, இந்நாளை பாதுகாப்பு தினமாகப் பிரகடனப்படுத்தி, ஆண்டு தோறும் நினைவு கூருவது, இனிவரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தங்களின் போது, இழப்புகளை எவ்வாறு தவிர்த்துக்கொள்ளலாம் என்பதனாலாகும் என்றும் அவர் கூறினார்.
அந்த அடிப்படையில் சுனாமி, வரட்சி, வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போதும் மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்ற அனர்த்தங்களான மண்ணகழ்வு, காடழிவு, வளங்களின் சுரண்டப்படல் எனப் பல்வேறு அனர்த்தங்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
34 minute ago
57 minute ago