2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அனுமதியின்றி தும்புத் தொழிற்சாலை அமைப்பு

Princiya Dixci   / 2021 ஜூலை 29 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படும் தும்புத் தொழிற்சாலையானது ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் அனுமதியின்றி அமைக்கப்படுவதாக அச்சபையின் தவிசாளர் எஸ்.சர்வானந்தன் தெரிவித்தார்.

மயிலம்பாவெளி, காமாட்சி அம்மன் கோவில் வீதியில் குறித்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் இத்தொழிற்சாலை அமைக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தொழிற்சாலை அமைக்கப்படுமானால் குறித்த பகுதியில் சுகாதார பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சாலைக்கு அருகிலேயே ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத்திட்டமும் அமைக்கப்படவுள்ளதால் எதிர்காலத்தில் அங்கு ஊடகவியலாளர்கள் வசிக்கமுடியாத நிலையேற்படும் என ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சாலை பகுதிக்கு வருகைதந்த ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சர்வானந்தன் குறித்த தொழிற்சாலையைப் பார்வையிட்டார்.

இதன்போதே, தொழிற்சாலையானது பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டு, இயற்கு நிலைக்கு வந்துள்ளதாகவும் இதற்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .