2025 மே 26, திங்கட்கிழமை

அபிவிருத்தித் திட்டங்கள் 25ஆம் திகதி கையளிப்பு

Princiya Dixci   / 2017 மே 15 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல் 

கிழக்கு மகாணசபையின் பின்தங்கிய மற்றும் தனித்து விடப்பட்டதுமான கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட அபிவிருதித்திட்டத்தின் கீழ் மேற் கொள்ளப்பட்ட திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்தார்.

அவ்வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகளின் முயற்சியினால், காக்காச்சுவட்டை கிராமத்தில் 7.5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கிட்டில் அமைக்கப்பட்டுள்ள, கூட்டுறவு வீதி கல்வெட்டு, குவாட்ஸ் வீதி, மூன்று வீட்டுத்திட்ட வீதிக் கல்வெட்டு, மாவடிமுன்மாரி வீதிக் கல்வெட்டு மற்றும் புளிடிப் பொதுக்கட்டடம் என்பன மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

அத்துடன் அன்றயதினம், பட்டிப்பளைப் பிரதேசத்துக்குட்பட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை பிரதான வீதியில் 5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் கொங்றீட் வீதி என்பனவும் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், பிரதித் தவிசாளர், மாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் அதிகாரிகள் எனப் பலரும் இதன்போது கலந்துகொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X