Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 18 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய பரிபாலனத்துக்கு வண்ணக்கர்களை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு, அந்த ஆலயத்தில் சனிக்கிழமை (17) நடைபெற்றது.
மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய பரிபாலனத்துக்கு வண்ணக்கர், உதவி வண்ணக்கர் பதவிகளுக்கு தெரிவுசெய்யும் தேர்தலானது மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் கே.குணநாதன் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தியாகராஜா விக்கிரமன் என்பவர் அதிகூடியளவாக 554 வாக்குகளைப் பெற்று ஆலய வண்ணக்கராகவும் இவருக்கு அடுத்தபடியாக உ.சுவேந்திரகுமார் 446 வாக்குகளைப் பெற்று உதவி வண்ணக்கராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலானது 1978ஆம் ஆண்டு முதல் நீதிமன்ற சட்ட தீர்ப்புக்கு அமைய, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
33 minute ago
39 minute ago