Princiya Dixci / 2021 ஜூன் 03 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்
கொரோனா நோயாளர்கள் மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கான அவசர உபாதைகளுக்காக அம்பியூலன்ஸ் சேவை, இன்றிலிருந்து (03) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேசத்துக்கான விசேட கொவிட் 19 தடுப்புச் செயலணிக் கூட்டம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, சமூக சேவைகள் நிறுவனமான அல் கிம்மா நிறுவனத்தினது அம்பியூலன்ஸ், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தரித்திருக்கும் நிற்கும் என்றும், அவசரத் தேவைகளுக்கு நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு தொடர்புகளை ஏற்படுத்தும் பட்சத்தில் சேவை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான அவரசர நிலைமைகளின் போது, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம்.நௌபர் தொடர்பு இலக்கம் 0767658828, 0759994009 மற்றும் ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சி.நியாஸ் தொடர்பு இலக்கம் 0779915841 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, சேவையை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago