2025 ஜூலை 19, சனிக்கிழமை

அரச உத்தியோகத்தர்களுக்கு தொற்று நீக்கிகள் கையளிப்பு

Editorial   / 2020 மே 11 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, எம்.எஸ்.எம்.நூர்தீன்

அரச பணியாளர்களின் பாதுகாப்புக்கான ஒருதொகை சுகாதாரப் பொருள்கள், இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தால், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் மாவட்டச் செயலகத்தில் வைத்து இன்று (11) கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்களில் கடமையாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் நோக்குடன், இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கிழக்குப் பிராந்திய விற்பனை முகாமையாளர் பொன்னையா புவனேந்திரனால், இந்த சுகாதாரப் பொருள்கள் கையளிக்கப்பட்டன.

இந்த சுகாதாரப் பொருள்களில் 3,450 முகக் கவசங்கள், 275 கைகளுவும் திரவங்கள், 5 லீட்டர் கொள்ளளவு கொண்ட 20 கலன் தொற்று நீக்கிகள், விழிப்புணர்வு பதாதைகள் என்பன அடங்கியிருந்தன.

இவற்றை உடனடியாக சகல பிரதேச செயலகங்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கான பணிப்புரை, மாவட்டச் செயலாளரால் வழங்கப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X