2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அரச காணிகள் அபகரிப்பைத் தடுக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு

கனகராசா சரவணன்   / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாவிதன்வெளிப் பிரதேசத்திலுள்ள அரச காணிகள் அபகரிக்கப்பட்டு, தனியார் மயப்படுத்தப்படு வருவதாகவும் அவற்றை மீட்டெடுக்க மக்கள் பிரதிநிதிகளான உறுப்பினர்கள் முன்வரவேண்டுமென, பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் அழைப்பு விடுத்துள்ளார்.

 

நாவிதன்வெளி பிரதேச சபையின் 12ஆவது கூட்டத்தொடர், தவிசாளர் தலைமையில் இடம்பெற்ற போதே, அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

இதன்போது, நாவிதன்வெளி பிரதேசத்தில் அரச காணிகள் அபகரிக்கப்பட்டு, தனியார் மயப்படுத்தப்பட்டு வருவதாக, பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அ.சுதர்சன், சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதனையடுத்து உரைத்த தவிசாளர், இவ்வாறு அரச காணிகள் தொடர்ச்சியாகக் கையகப்படுத்தப்பட்டு வந்தால், எதிர்காலத்தில் பொதுக் கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான அரச காணிகள் இல்லாத நிலை உருவாகுமென்றார்.

அத்துடன், கடந்தத காலங்களில் அரச காணிகளைக்  கையகப்படுத்துவதற்கு, ஒருசில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர் எனக் குற்றஞ்சாட்டிய தவிசாளர், எதிர்காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாதென வேண்டினார்.

மேலும், நாவிதன்வெளியில் அரச காணிகளைக் கையகப்படுத்தி வைத்திருக்கும் நபர்களை, மக்களின் பிரதிநிகளான பிரதேச சபையின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், பொது அமைப்புகள் அடையாளப்படுத்தி, பிரதேச சபைக்குத் தெரியப்படுத்த வேண்டுமென, அவர் அழைப்பு விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X