Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 மே 08 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
துஷாரா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்,ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்
மாகாண மட்டத்திலும், மத்திய அரச நிறுவனங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை உடனடியாக நியமிக்க நடவடிக்கை வேண்டுமென, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு, மட்டக்களப்பு, மாவடிவேம்பு மைதானத்தில் நேற்று (07) இடம்பெற்றபோது, கட்சியின் தொழிலாளர் தின மும்மொழிவாக வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை மும்மொழிந்து வலியுறுத்திப் பேசினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் இன்று வேலையின்றி இருக்கிறார்கள். அந்தப் பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல தீர்மானங்களை எடுத்துள்ளார்.
“அத்திட்டம், மாகாண மட்டத்திலும், மத்திய அரச நிறுவனங்களிலும் உள்ள வெற்றிடங்களுக்கு கால தாமதமின்றி, கட்சி பேதங்களுக்கு அப்பால் உடனடியாக வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்.
“அவர்களது தரங்களை மாத்திரம் அடிப்படையாக வைத்தே இந்த நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
17 May 2025