2025 மே 03, சனிக்கிழமை

அரச போக்குவரத்து சேவைகளுக்கு மாவட்டத்துக்குள் அனுமதி

Editorial   / 2020 ஏப்ரல் 22 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அரசாங்க போக்குவரத்து சாலைகளில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்தை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு, சாலை முகாமையாளர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜாவால் அறிவுத்தப்பட்டுள்ளது.

எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது இயங்கிவருகின்ற  ரெதீதென்ன, வாகரை, வாழைச்சேனை, ஏறாவூர், மட்டக்களப்பு, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி ஆகிய சாலைகளில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளூர் சேவைகளை மட்டும் நடத்துமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சேவையில் சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒரு பஸ்ஸில் 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பயணிகள் கண்டிப்பாக முகக் கவசங்களை அணிந்திருப்பதுடன், சமூக இடைவெளியையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

வெளிமாவட்டங்களுக்கிடையே  போக்குவரத்துக்களை மேற்கொள்வது தற்போதைய காலகட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றக் கூடிய ஆபத்தை உண்டாக்கலாம் என்பதாலேயே மாவட்டங்களுக்கிடையிலான அத்தியாவசிய சேவையை மாத்திரம் மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வறிவித்தலை கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் இலங்கைப் போக்குவரத்து சபை சாலை முகசாமையாளர்களுக்கு மாவட்டச் செயலாளரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X