2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அரசியல் கைதிகள் 9 பேர் உண்ணாவிரத போராட்டம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 9 பேர் திங்கட்கிழமை(12) அதிகாலை தொடக்கம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அறைகளிலேயே இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தம்மை விடுதலை செய்யும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தமிழ் அரசியல் கைதிகள் 9 பேரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X