Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்,எப்.முபாரக், எம்.ஏ.றமீஸ் .கே.றஹ்மத்துல்லா, தீஷான் அஹமட்
அரசாங்க மருத்துவர்கள் இன்று மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் காரணமாக மட்டக்களப்பு, திருகோணமலை,அம்பாறை மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம் அடைந்தமையால் அரசாங்க வைத்தியசாலைகளை நம்பி வரும் ஏழை நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். வெளிநோயாளர் பிரிவுக்கு வந்த நோயாளர்கள் பலரும் திரும்பிச் சென்றதைக் காண முடிந்ததாக கூறும் பிரதேச ஊடகவியளாலர்கள்,இதேவேளை,அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீவிர அதி தீவிர சிகிச்சைப்பிரிவுகள் என்பன இயங்கியதுடன் மருந்து வழங்கல் பிரிவு உட்பட ஏனைய பிரிவுகளும் இயங்கியதாகவும் குறிப்பிட்டனர்.
அரசாங்க மருத்துவர்கள் முன்வைத்த வேலைநிறுத்தம் தொடர்பாக தெரியவரவதாவது,இதுவரை கொள்வனவு செய்யப்பட்டுள்ள மருந்துகளுக்கான தட்டுப்பாடு, மருந்துகளின் தரம், அதன் கால எல்லை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன் வைத்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, ஆதார மற்றும் மாவட்ட வைத்தியசாhலைகள் மத்திய மருந்தககங்கள் என்பற்றில் வெளி நோயாளர் பிரிவு வெறிச் சோடிக்காணப்பட்டதுடன் கிளினிக்களும் இடம் பெறவில்லை.
திருகோணமலை
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை,மூதூர் , கந்தளாய், தோப்பூர், சம்பூர், கிளிவெட்டி,பட்டித்திடல் உள்ளிட்ட பிரதேசத்திலிருந்து மருந்துகள் பெறுவதற்காக வருகை தந்த நோயாளர்கள் காத்திருந்ததையும்,சிலர் திரும்பிச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
அம்பாறை
அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலைகளின் வைத்தியசாலைப் பணிகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டன. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் ஸ்தம்பித நிலையில் காணப்பட்டதால், நோயாளர்கள் சிகிச்சை பெறமுடியாமல் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியதை அவதானிக்க முடிந்தன.
4 minute ago
30 minute ago
33 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
30 minute ago
33 minute ago
43 minute ago