2025 மே 03, சனிக்கிழமை

அரிசிக்கு நிறமூட்டம்; ஒருவருக்கு அபராதம்

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பிரதேசத்தில் அரிசிக்கு சிகப்பு நிறமூட்டம் செய்து  விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியிருந்தவேளை கைதுசெய்யப்பட்ட விற்பனை நிலைய உரிமையாளருக்கு நீதிமன்றால் நேற்று (22) இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான கலப்படம் செய்தமை கண்டுபிடிக்கப்படுமிடத்து, வர்த்தக நிலையத்தின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமென, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரதேச சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்  யுஎல். அப்துல் மஜீது நீதிமன்றுக்கு தெரிவித்த  குற்றச்சாட்டிற்கிணங்க,  விற்பனை நிலையத்தின் உரிமையாளர், சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்ற நீதிபதி, அபராதத்தை விதித்ததுடன், எச்சரிக்கையையும் விடுத்தார்.

செயற்கையாக சிகப்பு நிறச்சாயமூட்டிய அரிசியை விற்பனைக்காக  களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, அதிகம் உடைந்த அரிசியை உணவு நியம ஒழுங்கு விதிக்கு முரணாக களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவருக்கெதிராக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் முதலாந்திகதியன்று நடத்தப்பட்ட  தற்காலிக சந்தையில் காணப்பட்ட அரிசி மாதிரியை ஆதாரமாகக் கொண்டு, அந்த அரிசி கொள்வனவு செய்யப்பட்ட விற்பனை நிலையம், மறுநாள் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டது. 

அதன்போது அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 09 மூடை அரிசி முத்திரையிடப்பட்டதுடன், அதில் சிறிய தொகுதி அரிசி தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் பிரகாரம் அரிசி நிறமூட்டப்பட்டமை உறுதிசெய்யப்பட்டதையடுத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

பிரதேச சுகாதார வைத்தியதிகாரி எம்எச்எம். தாரிக், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல். நௌபர் ஆகியோரின் வழிகாட்டலில், மேற்படி வர்த்தக நிலையம் முற்றுகையிடப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X