Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஜனவரி 03 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித்
பிரஜைகள் சமாதானத்துக்கான விருது பெற்றவரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான அருட்தந்தை பென்ஞமின் ஹென்ரி மில்லரின் உடல், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி வளாகத்தில் நேற்று (02) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
அருட்தந்தை மில்லர், புதுவருட தினத்தன்று (01) தனது 94ஆவது வயதில் மட்டக்களப்பில் காலமானார்.
அருட்தந்தையின் உடல், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக புனித மிக்கேல் கல்லூயில் வைக்கப்பட்டு, இறுதி நல்லடக்க நிகழ்வுகளுக்காக, புனித மரியாள் பேராலயத்துக்குக் கொண்டுவரப்பட்டு, இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கான இயேசு சபை மேளானர் அருட்தந்தை டெக்ஸ்டர் கிறே அடிகளார் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து, மரியாள் பேராலயத்திலிருந்து அருட்தந்தையின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த இறுதி நல்லடக்க நிகழ்வில், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல், இலங்கை சமாதானப் பேரவையின் இயக்குனர் ஜோன் வில்லியம், சர்வமதத் தலைவர்கள், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், சமயப் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரான அருட்தந்தை பென்ஞமின் ஹென்ரி மில்லர், 1948ஆம் ஆண்டு, மட்டக்களப்புக்கு வருகை தந்து கடந்த 70 வருடங்களாக மட்டக்களப்பில் மனிதாபிமான, சமூகப்பணி, கல்விப்பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
42 minute ago