2025 மே 23, வெள்ளிக்கிழமை

அருள்மிகு ஸ்ரீ கருணைமலை பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, வெல்லாவெளி பிதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட மண்டூர் காக்காச்சிவட்டை - பலாச்சோலை,  அருள்மிகு கருணைமலைப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம், எதிர்வரும் 27ஆம் தகதி காலை நடைபெறவுள்ளது.

இதன் ஆரம்பக்கிரியைகள், எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகி, இரண்டு நாட்கள் நடைபெற்று 25ஆம், 26ஆம் திகதிகளில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வுகள் நடைபெற்று, 27ஆம் தகதி சனிக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெறும்.

28ஆம் திகதிமுதல் மண்டலாபிஷேகம் நடைபெற்று, செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி பாற்குட பவனி நடைபெற்று, சங்காபிசேகம், வசந்த மண்டப பூசையுடன் நிறைவுபெறும்.

கும்பாபிஷேக நாட்களில் தினமும் அன்னதான நிகழ்வுகளும் நடைபெறும் என்று, ஆலய நிர்வகத்தினர் தெரிவித்தனர்.

சுயமாக உருவாகிய மூல மூர்த்தி, மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட அருள்மிகு கருணைமலைப் பிள்ளையார் ஆலயம் என்பன,  1990ஆம், 19901ஆம் ஆண்டுகளில் நிலவிய யுத்த சூழ்நிழலயில் இராணுவத்தினரது செல் தாக்குதலில் சேதமடைந்தன.

இவ்வாலயம், புனரமைப்புக்காக புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டலில் என்.பத்மநாதனைத் தலைவராகக் கொண்ட புனர்வாழ்வு அதிகார சபை, இந்து சமய அலுவலகள் திணைக்களம், ஆகியவற்றின் நிதியுதவிகளுடன் பொதுமக்கள், நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் உதவிகளுடனும் புனரமைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X