Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மார்ச் 13 , மு.ப. 11:45 - 1 - {{hitsCtrl.values.hits}}
அரை குறை ஆடையணிந்த பெண்களின் விளம்பரங்களை அரசாங்கம் தடை செய்ய வேண்டுமென காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மகளிர் தின ஒன்று கூடலின் போது, தீர்மானம் நிறைவேற்றுப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று (12) நடைபெற்ற மகளிர் தின ஒன்று கூடல் வைபவத்திலேயே, இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், இந்த தீர்மானம், மகளிர் விவகார அமைச்சுக்கு அனுப்புவதென பிரகடனம் செய்யப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தலைமையில் நடைபெற்ற மகளிர் தின ஒன்று கூடலில், இந்தப் பிரகடனத்தை உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் வெளியிட்டார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில், “அரை, குறை ஆடையணிந்து கொண்டு பெண்கள் விளம்பரங்களில் ஈடுபடுவதையும் பொது இடங்களில் உலாவுவது போன்ற செயற்பாடுகளை அரசாங்கம் தடை செய்வதினூடாக பெண்களுக்கிருக்கின்ற கௌரவத்தைப் பாதுகாக்க முடியும்.
“அத்தோடு, ஒரு வளமான பெண்ணை சமூகத்தில் உருவாக்குகின்ற செயற்பாட்டை செய்வதற்கு ஏற்ற வகையில், சட்டங்களை சீரமைத்து இவ்வாறான விளம்பரங்களினூடாகவும் பொது இடங்களிலும் பெண்களின் தரத்தைக் குறைக்கின்ற செயற்பாடுகளை நிறுத்துவதற்கு சட்டங்களை ஆக்க வேண்டுமென காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மகளிர் தின ஒன்று கூடல் வைபவத்தில் இங்கு கலந்து கொண்டுள்ள பெண்கள் சார்பாக இந்த கோரிக்கையை விடுக்கின்றோம்.
“இந்தச் செயற்பாட்டை மகளிர் விவகார அமைச்சு மேற்கொள்வதுடன், அதற்காக இந்த தீர்மானத்தை எமது காத்தான்குடி பிரதேச செயலகத்திலுள்ள மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக இதனை நாங்கள் மகளிர் விவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கின்றோம்” என்றார்.
காண்டீபன் Saturday, 17 March 2018 04:57 AM
வரவேற்ப்போம் # ஆபாசமில்லா ஆடை ஆபத்தில்லா அழகு
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago