2025 மே 21, புதன்கிழமை

அல்குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு பாராட்டு விழா

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் அல்குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 2,000 பேர் பரிசளித்துப் பாராட்டப்படவிருப்பதாக, ஹாபிழ்கள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்ஹ் எம்.ரீ. அப்துல் காதர் (பலாஹி)  தெரிவித்தார்.

 

இது தொடர்பாக ஊடகங்களுக்கு விவரம் தரும் சந்திப்பு, ஏறாவூர் குல்லியது தாரில் உலூம் அரபுக் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

ஏறாவூர் குல்லியது தாரில் உலூம் அரபுக் கல்லூரி வளாகத்தில், நாளை மறுதினம் (30) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில், நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வில், கிழக்கு மாகாணத்திலுள்ள அறபிக் கலாசாலைகள், அரபு மத்ரசாக்கள் மற்றும் பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிகளும் மார்க்கப் பெரியார்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .