2025 மே 09, வெள்ளிக்கிழமை

அழுகிய நிலையில் ஆணின் சடலம்

Freelancer   / 2022 ஏப்ரல் 22 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு - கொக்குவில், பனிச்சையடி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கிணறிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

பனிச்சையடி,ஆட்டுப்பண்ணை வீதியில் உள்ள பாழடைந்த காணியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த கிணற்றிலிருந்தே இந்த சடலம் மீட்ககப்பட்டுள்ளது.

இளைஞர் ஒருவர் அப்பகுதியில் முந்திரி பழம் பறிக்கச்சென்ற போது கிணற்றிலிருந்து துர்நாற்றம் வருவதை அவதானித்து கிணற்றை சென்று பார்வையிட்டபோது அங்கு சடலம் கிடப்பதை கண்டு கொக்குவில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த பகுதிக்கு சென்ற கொக்குவில் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சடலம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதன் காரணமாக நீண்ட நாட்களுக்கு முன்பாக குறித்த நபர் இறந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X