2025 மே 02, வெள்ளிக்கிழமை

அவயங்கள் வழங்கல்

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில், ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அவயங்களை இழந்தவர்களுக்கு அவயங்களை வழங்கும் நிகழ்வு, மாவட்டச் செயலகத்தில் இன்று (10)  நடைபெற்றது.

நவஜீவன அமைப்பின் சுகாதார, புனர்வாழ்வு செயற்றிட்டத்தின் ஊடாக இந்த உதவிகள் வழங்கப்பட்டன. 

நவஜீவன அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் செ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில், மட்டக்களப்பு உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கால்களை இழந்த 66 பேருக்கு 76 அவயங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 30 இலட்சம் ரூபாய் என நவஜீவன அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் செ.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .