2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஆங்கிலப்பாட ஆசிரியரை நியமிக்கவும்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 05 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கோட்டத்தில் அமைந்துள்ள அஷ்ரப் கனிஷ்ட வித்தியாலயத்தில் கடந்த 20 வருடங்களாக ஆங்கிலமொழிப் பாட ஆசிரியருக்கான வெற்றிடம் நிலவுவதாக அவ்வித்தியாலய அபிவிருத்திச்சங்க மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஆண்டு 01 முதல் 05 வரையுள்ள இவ்வித்தியாலயம் 1996ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உட்பட 115 மாணவர்கள் கற்பதுடன், 05 ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என அவ்வித்தியாலய அதிபர் ஏ.பி.அப்துல் றவூப் தெரிவித்தார்.

இவ்வித்தியாலயத்தில் இதுவரைகாலமும் ஒரு ஆங்கிலமொழிப் பாட ஆசிரியரும்  நியமிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.  

இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் உட்பட கல்வி நிர்வாகிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பலமுறை தாம் எடுத்துக்கூறியதாகவும் எனினும், இது தொடர்பில் கவனத்திற்கொள்ளப்படவில்லை எனவும் பெற்றோரும் நிர்வாகத்தினரும் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X