Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:03 - 1 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
கணித பாட ஆசிரியர்களிடையே கற்றல் மற்றும் கற்பித்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை (30) மட்டக்களப்பு 'ஈஸ்ட் லகூண்' ஹோட்டலில் நடைபெற்றது.
கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் கணித பாடத்தில் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்ய முடியும் என இங்கிலாந்திலிருந்து வந்த கணிதத்துறைத் தலைவர் ப. நடேசன் ஆலோசகராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் எம். செல்வராஜாவின் முயற்சியினால் ஆசிரியர்களுக்கான முழுநாள் கருத்தரங்கில் மட்டக்களப்பு வலயம், கல்குடா வலயம், வவுணதீவு மேற்கு வலையங்களிலிருந்து 150 கணித பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன் கற்பித்தலில் தங்களது திறன்களையும் வெளிப்படுத்தினர்.
மட்டக்களப்பு வலய, பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ். கோவிந்தராஜா, கல்குடா பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். குலேந்திரகுமார், மட்டக்களப்பு வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ். சுகுமாரன், கல்குடா வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.ரி.அமலதாஸ், மட்டக்களப்பு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜி.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


29 minute ago
31 minute ago
39 minute ago
48 minute ago
N.thileeban Sunday, 20 August 2017 06:52 AM
சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதன் மூலமே சிறந்த மாணவர்களை உருவாக்குவாக்க முடியும் எனவே இத்திட்டத்தை மேலும் விரிவாக மேற்கொள்ள வேண்டும்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
31 minute ago
39 minute ago
48 minute ago