2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆணையாளருக்கு எதிராக மேயர் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2021 நவம்பர் 11 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர சபையின் மேயரால் தொடரப்பட்ட வழக்கு, டிசெம்பர் மாதம் 06ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாநகர சபையால் ஆணையாளருக்கு வழங்கப்பட்டு, மீளப் பெறப்பட்ட அதிகாரங்களில் மாநகர ஆணையாளர் தலையீடுசெய்வதை தடுக்கக் கோரி, மாநகர மேயரால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றில், நீதிபதி என்.எம்.அப்துல்லா தலைமையில் இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மேயர் தி.சரவணபவன், ஆணையாளர் மா.தயாபரன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

குறித்த வழக்கு தொடர்பாக மேலதிகமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முதல் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் டிசெம்பர் 06ஆம் திகதி வரையில் வழக்கை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X