Princiya Dixci / 2021 ஜூன் 06 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, ஞானசூரியம் சதுக்கத்திலுள்ள செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவன காரியாலயத்தில் ஆண்ணொருவரின் சடலம், நேற்று (05) மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றிவரும் கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய செபமாலை ஜெயகாந்தன் குருஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி நிறுவனத்தின் காரியாலயத்தில் தற்காலிகமாக தங்கியிருந்து மாவட்டச் செயலகத்திற்கு கடமைக்கு சென்றுவருவதாகவும் இரவில் இங்கு பாதுகாவலராகவும் செயற்பட்டுவரும் இவர், வழமைபோல வெள்ளிக்கிழமை கடமையில் இருந்து திரும்பி, அங்கு இரவு உணவை உண்டபின் காரியாலயக் கதவைப் பூட்டிவிட்டு, நித்திரைக்குச் சென்றுள்ளார்.
சம்பவதினமான நேற்றுக் காலை 11 மணி ஆகியும் காரியாலயக் கதவு திறக்கப்படாததையடுத்து, கதவை உடைத்து உள் சென்றபோது, அங்கு அவர் படுத்த படுக்கையில் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தைப் பார்வையிட்ட பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தும் படி, பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
51 minute ago
59 minute ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
59 minute ago
2 hours ago
6 hours ago