2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஆண் வெட்டிக் கொலை; இருவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 மே 19 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு - கல்லடி, வேலூர் பிரதேசத்தில் இம்மாதம் 15ஆம் திகதி இரவு ஆணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும், ஜுன் தாம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார்  

வேலூர் 4ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான 29 வயதுடைய இராமசந்திரன் மனோரதன்  என்பவரே, சம்பவத்தில் கொல்லப்பட்டார்.

அவரது வீட்டின் பின்பகுதி வெற்றுக் காணியில் வைத்து கோடாலியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், இவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் 24, 25 வயது இளைஞர்களே மேற்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நண்பர்களாக இவர்கள், மதுபோதையில் குறித்த நபரின்  வீட்டின் பின்பகுதி வெற்றுக் காணியில் தாம் இருப்பதாக அவரை அங்குவருமாறு அலைபேசி ஊடாக அழைப்பு விடுத்து, அவரை அங்கு வரவழைத்து, அவர் மீது கோடாரியால் வெட்டிக்கொலை  செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனரென, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (18) ஆஜர்படுத்திய போது, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X