2025 மே 14, புதன்கிழமை

ஆதனவரியை ஒன்லைனில் செலுத்தலாம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி, நகர சபைக்காக ஆதனவரியை ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான இணைய வசதி, இன்று (20) முதல் தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் ஆகியோர் இதனை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த இணையத்தில் ஒன்லைன் மூலம் முதன் முதலாக பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், தமது ஆதனவரியைச் செலுத்தினார்.

தமது ஆதனவரியை, வெளியூர்களில் இருந்தும் வெளிநாட்டிலிருந்தும் காத்தான்குடி நகர சபை பிரிவில் வசிப்போர் இனிவரும் காலங்களில் ஒன்லைன் மூலம் செலுத்த முடியுமென, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் இதன்பேது தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .