2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஆதிவாசிகளுக்கு கைகொடுப்பு

Editorial   / 2020 மே 04 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தின், குஞ்சக்குள கிராமத்தில், ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 80 ஆதிவாசி குடும்பங்களுக்கு, 'ரெயின் றொப் ஓட்டாவா', கனடா அமைப்பினரால், உலர் உணவுப் பொருள்கள், நேற்று (03) வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த கிராம ஆதிவாசி மக்கள், காட்டில் தேன் எடுத்தல், பழங்களைச் சேகரித்து விற்பனை செய்தல், குளத்தில் மின்பிடித்தல், கால் நடைவளர்ப்பு போன்றவற்றின் மூலம் தங்களது வருமானத்தை பெற்று வந்தனர்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தால், தங்களது வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த உதவியை வழங்கிய மேற்படி அமைப்புக்கு தமது நன்றியை  ஆதிவாசிகளின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X