Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 02 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்
“தமிழ் மக்கள், ஆயுதத்தைக் கைவிட்டுள்ளபோதிலும், அஹிம்சையைக் கைவிடவில்லை” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இந்திய, இலங்கை அரசாங்கங்கள், அஹிம்சைப் போராட்டங்களுக்கு மதிப்பளிக்கும் தன்மை குறைவடைந்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் இன்று (02) நடைபெற்ற காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“மகாத்மா காந்தி மேற்கொண்ட அஹிம்சைப் போராட்டம் காரணமாகவே, இந்தியாவும் இலங்கையும் சுதந்திரமடைந்தன. தந்தை செல்வா, காந்தியின் வழியையே பின்பற்றியிருந்தார். அஹிம்சை வழியிலேயே போராட்டங்களை நடத்தினார்.
“1956ஆம் ஆண்டு, தமிழரசுக்கட்சியின் தலைவரான தந்தை செல்வா மேற்கொண்ட சத்தியாக்கிரகம் மூலமே, இந்த நாட்டில் தமிழ் மொழிக்கு அங்கிகாரம் கிடைத்தது.
“அஹிம்சைப் போராட்டங்கள் மூலம் பல விடயங்கள் நடத்தப்பட்டுள்ளன. காணாமல்போன உறவுகள் கூட, 100 நாட்களையும் தாண்டி அஹிம்சை ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
“அந்தவகையிலேயே, சம்பந்தர் ஐயாவும் அஹிம்சையைக் கையில் ஏந்தி, யாருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாத வகையில், அரசாங்கத்துடன் கூட நிதானமாக பேசிக்கொண்டு, தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றார்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
30 minute ago
31 minute ago