Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
இணையத்தளங்கள் மற்றும் சமூகத்தளங்களில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டப் பேரணி இன்று புதன்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம உத்தியோகஸ்தர் நலன்புரி சங்கம் மற்றும் பதவியணியினர் நலன்புரிச்சங்கம் ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டதுடன் தமது எதிர்ப்பினையும் தெரிவித்தனர்.
சில இணையத்தளங்கள் தமது பொறுப்புகளை மறந்து ஊடக தர்மத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடுவதாகவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.
அண்மையில் பிரதேச செயலாளர் ஒரு இனத்திற்கு காணியை வழங்கியதாகவும் அதனை எதிர்த்த பிரதேச செயலாளரை இடமாற்றியதாகவும் இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்தன. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதுடன் இன நல்லுறவை சீர்குலைக்கும் செய்தி எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
செய்தியின் உண்மைத்தன்மையினை அறிந்துசெய்திகளை வெளியிடுவதன் மூலம் சமூகத்தின் பொறுப்புக்கூறலை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் இங்கு சுட்டிக்காட்டினர்.
பிரதேச செயலகத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகி காந்தி பூங்காவரை வந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன், மீண்டும் மாவட்ட செயலகம் வரையில் ஆர்ப்பாட்ட பேரணி சென்று அங்கு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.


16 minute ago
19 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
34 minute ago
1 hours ago