Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஷ்ணா
மட்டக்களப்பு, சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான வழக்கு விசாரணை, நவம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (05) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றத்தால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யோ.ரொஸ்மன், முற்போக்குத் தமிழர் அமைப்பின் இளைஞர் ஒருங்கிணைப்பாளர் அனோஜன், மாநகர சபை உறுப்பினர்களான திருமதி செல்வி மனோகரன் மற்றும் அருள்தாஸ் சுசிகலா ஆகியோருக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணையே இன்று இடம்பெற்றிருந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரியான ஆசாத்தின் உடற்பாகத்தை கள்ளியன்காடு இந்து மயானத்தில் புதைத்தனர்.
இதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமையால் குறித்த வழக்கு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் சந்தேகநபரான முன்னாள் மாநகர சபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகரன் கடந்த மாதம் சுகயீனமுற்றிருந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
37 minute ago
43 minute ago