Niroshini / 2016 ஜூலை 30 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்
வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்கட்பட்ட தும்பங்கேணி சுரவணையூற்றுப்பகுதியில் மனைவி உட்பட 5 பேரைத் மண்வெட்டியால் தாக்கியவருக்கு எதிர்வரும் 4 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நிதிமன்ற நீதிபதி இன்று (29) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 28 ஆம்திகதி மாலை தனது மனைவி டிலக்ஷனா (வயது 18), அவரது தந்தை, தாய், அம்மம்மா, மாமா மற்றும் சித்தி ஆகியோரைத் தாக்கி படுகாயமடையச்செய்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய டிலக்ஷனாவின் கணவரான தங்கவேல் 28ஆம் திகதி வெல்லாவெளி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிபதி எஸ்.றிஸ்வி முன்நிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
14 minute ago
29 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
32 minute ago
47 minute ago