Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 மார்ச் 12 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு நாவற்குடா சிவன் ஆலயத்தின் புனர்நிர்மானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஆலய வளாகத்தில் நேற்று (11) நடைபெற்றது.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் தாந்தாமலை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ எம்.கே. சச்சிதானந்த குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகளும் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றன.
நாவற்குடா சிவன் ஆலய திருப்பணிச்சபையின் ஏற்பாட்டில் ஆலயத்துக்கான வசந்தமண்டபம், தெற்கு வாசல் கோபுரம், அம்மன், முருகன், நவக்கிரகம், நாகபிறான் நடராஜர் ஆகிய சிற்றாலயங்களும், ஆலய சுற்றுமதில் ஆகியவற்றுக்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நாவற்குடா சிவாலயத்தின் அம்மன் ஆலயத்துக்கான அடிக்கல்லை யாழ். உறும்புராய் சிவதர்ம சாஸ்தா ஆலய ஆதீனம் பிரம்ம ஸ்ரீ தாணு வாசுதேவ சிவாச்சாரியாரும் மற்றும் ஆலய சிற்றாலயங்களுக்கான அடிக்கல்லை , அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சௌந்தராஜன் குருக்கள், திருப்பெருந்துறை கொத்துகுளம் மாரியம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நாராயண சன்முகநாதக் குருக்கள், மாவட்ட செயலக செல்வ விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்கள், மட்டக்களப்பு கீரிமடு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு ஜெகநாதன் குருக்கள் ஆகியோர் நாட்டி வைத்தனர்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் வைத்தியர் த.சுந்தரேசன் மற்றும் ஆலய திருப்பணிச்சபையினர், பக்த அடியார்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago