2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஆலய வழிபாடுகள் நடத்த அனுமதி

Freelancer   / 2021 ஜூலை 12 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொதுமக்களை ஒன்றுகூடுதலை தவிர்க்கும் வகையில் கடந்த இரண்டு மாத காலமாக இடைநிறுத்தப்பட்டுயிருந்த ஆலய வழிபாடுகள், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு மீண்டும் ஆலய வழிபாடுகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு (11) திருப்பலிகள் இடம்பெற்றன .

அந்தவகையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரின் தலைமையில் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுகாதார நடைமுறையின் கீழ் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டன.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X