2025 மே 01, வியாழக்கிழமை

ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு போராட்டம்

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, வ.சக்தி, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் முன்னால் இன்று (24)  காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவும்  களுவஞ்சிக்குடி பிரதேச பொது அமைப்புகளும் இதனை ஏற்பாடு செய்திருந்தன.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில்  பௌதீக வளங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வைத்தியர் பற்றாக்குறை நீண்டகாலமாக நிலவி வருவதாகவும் இதனை தீர்த்து வைக்க உரியவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என, போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

53 வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில், 14 வைத்தியர்களே இங்கு கடமையாற்றுவதாகவும் புதிதாகக் கடமையேற்று வரும் வைத்தியர்கள், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இடமாற்றம் பெற்றுச் செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவு உட்பட முக்கிய சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கபட்டுள்ள நிலையிலும் வைத்தியர்கள் இல்லாத காரணத்தால் சிகிச்சையளிக்க முடியாத நிலையில் அவை மூடப்பட்டுள்ளதாகவும், போராட்டத்தில் கலந்துகொண்டுடோர் சுட்டிக்காட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .