Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மே 28 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் நகர சபையின் உயரதிகாரியொருவர், தெரிவுசெய்யப்பட்ட நகர சபை நிர்வாகத்தோடு இணைந்து, பிரதேச அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒத்துழைக்கவில்லை எனத் தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கு நேரடியாகவும் எழுத்துமூலமும் தான் கொண்டுவந்துள்ளதாக, ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளர் மீராலெப்பை றெபுபாசம் தெரிவித்தார்.
இந்த விடயத்தை, ஆளுநர், தனது கவனத்துக்கு எடுத்துள்ளாரெனவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் தெரிவித்த றெபுபாசம், "நிர்வாகத்திலுள்ள அதிகாரிகள், பிரதேச மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகம் அந்தப் பிரதேச மக்களுக்காக மேற்கொள்ளும் நலத்திட்டங்களுக்கும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும், அதிகாரிகள் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
“அவ்வாறு இடம்பெறாவிட்டால், வாக்களித்த மக்களுக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும்.
“இந்த விடயத்தில், எறாவூர் நகரசபை அதிகாரி, அதிகாரத் தோரணையில் மாத்திரம் செயற்படுவதால், நகரசபை ஊழியர்களும், பிரதேச மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
இந்தப் பின்னணியில், ஏறாவூர் நகர சபையில் நகரசபை ஊழியர்களை அனுசரித்து, மக்களுக்காகப் பணியாற்றக்கூடிய அதிகாரிகளே தேவைப்படுகிறார்கள் என்பதை, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் குறித்து, ஆளுநரிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து, குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக தான் கரிசனை எடுத்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தனக்கு எழுத்து மூலம் பதில் அனுப்பிவைத்துள்ளார் எனத் தெரிவித்த அவர், ஆளுநரின் நடவடிக்கையின் பிரகாரம், மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago