2025 மே 14, புதன்கிழமை

ஆளுநருக்கு எதிரான கையெழுத்துகள், ஜனாதிபதியிடம் கையளிப்பு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக, தமது கட்சி சார்பாக, மக்கள் மத்தியில் சேகரிக்கப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மகஜரை, ஜனாதிபதி செயலாளரிடம் கையளித்துள்ளதாக, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வீ.கமலதாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி, நீதிபதியை மாற்றியவர், “இந்து ஆலயங்களை உடைத்து, பள்ளிவாசல் கட்டுனேன்” எனக் கூறிய ஒருவரை, தாம் ஒருபோதும் கிழக்கு மாகாணத்தை ஆள விடமாட்டோம் என்றார்.

இப்பதவிக்கு மிகவும் பொருத்தமான ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்த அவர், இதற்கான முடிவுகளுடன் மிக விரைவில் தொடர்புகொள்வதாக, ஜனாதிபதி செயலாளர் கூறியதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X