2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘இக்கட்டான காலகட்டத்தில் கவனமாக காய் நகர்த்த வேண்டும்’

Editorial   / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எச்.ஏ. ஹுஸைன்

திரும்பும் திசையெல்லாம் நெருக்கடிகள் நிறைந்திருப்பதால், மிகவும் நிதானமாக காய்நகர்த்த வேண்டிய காலகட்டத்தில் சிறுபான்மையினராகிய நாங்கள் இருக்கிறோம் என  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூரில் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலகத்தில் நேற்று (28) இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதில் கடந்த காலங்களில் சிறுபான்மையினர் தவறிழைத்து விட்டோம் என்பதை தற்போது காலம் உணர்த்தி நிற்கின்றது.

“உரிமைகளையும் நலனோம்பு விடயங்களையும் அபிவிருத்திகளையும் அடைந்து கொள்வதில் சிறுபான்மை மக்களின் போராட்டக் குரலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் உறுதியாக இருந்து வந்திருக்கின்றது.

“அந்த வகையிலே சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து கொண்டு ஒரு பேச்சுவார்த்தை மூலமாக நாங்கள் நாங்கள் எங்களது அபிலாஷைகளை அடைந்து கொள்வதில் முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்.

“‪சிறுபான்மையினருக்குள் இருக்கின்ற முரண்பாடுகளை முதலில் தீர்க்க வேண்டும். இந்த விடயத்திலே சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்பட்டு, முதலில் குறைந்தபட்சம் கலந்துரையாடலையாவது செய்ய வேண்டும். அதன்மூலம் பல விடயங்களை சிறுபான்மையினர் சாதித்துக் கொள்ள முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .