2025 மே 21, புதன்கிழமை

இடமாற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்

வடிவேல் சக்திவேல்   / 2017 ஒக்டோபர் 02 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகத்தின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி, இருவேறு இடங்களில் பெற்றோர்கள்  இன்று (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகுலேஸ்வரி புள்ளநாயம், திருக்கோயில் வலயக் கல்விப் பணிப்பாளராக நேற்றிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளாரென, கிழக்குமாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்னது.

இந்நிலையில், இந்த இடமாற்றத்தை இரத்துச் செய்யக்கோரி, பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்துக்கு முன்பாகவும் வெல்லாவெளியிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதுடன், கிழக்கு மாகாண ஆளுநருக்கு ஆனுப்பிவைக்கும் வகையில் பிரதேச செயலாளர்களிடம் ஆர்ப்பாட்டக்காரர்களால் மகஜர்களும் சமர்ப்பிக்கட்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .