2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இணையவெளி துஷ்பிரயோகங்களுக்கெதிரான பாதயாத்திரை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையவெளிகளில், சமூக ஊடகங்களில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கெதிரான பாதயாத்திரை, ஏறாவூர் நகர் மற்றும் செங்கலடியிலும், இன்று (19) இடம்பெற்றது.

ஏறாவூர் நகர பொலிஸ் நிலையம் முன்பாக மணிக்கூட்டுக்கோபுர சந்தியிலிருந்தும் செங்கலடி-பதுளை வீதிச் சந்தியிலிருந்தும் ஆரம்பமான இந்த பாத யாத்திரை, செங்கலடி யுனைட்டட் விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்ததுடன், இணையவெளி சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கெதிரான பிரச்சாரமும் இதன்போது இடம்பெற்றது.

இணையவெளி சமூக ஊடகங்களில் இடம்பெறும் அவமதிப்புகளுக்கெதிராகவும் இணையவெளி சமூக ஊடகங்களை ஆக்கபூர்வமான விடயங்களுக்குப் பயன்படுத்தி அதிகபட்ச நன்மையடைய சமூகத்தைத் தயார்படுத்துவதே, இந்தப் பாத யாத்திரை விழிப்புணர்வின் நோக்கமாகுமென்று, வொய்ஸ் மன்றம் நிறுவனத்தின் பிராந்திய இணைப்பாளர் எஸ்.கே. விஸ்வநாத் தெரிவித்தார்.

வொய்ஸ் மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த பாத யாத்திரையில் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கெதிராகவும் சிறுவர் உரிமைகளுக்காகவும் செயலாற்றுகின்ற சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்கள், சர்வமதங்களையும் சார்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றினர்.

'முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் இணையவெளிகளில் உலாவருவதையிட்டு அவதானமாக இருப்போம்', 'சமூக ஊடகங்கள் மூலம் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவோம்',  'சமூக ஊடங்களின் மூலம் மற்றவர்களை மதிப்போம்', ‘அடுத்தவரின் படங்களை அனுமதியல்லாமல் பகிரந்து கொள்ளலாமா' போன்ற வாசகங்களைத் தாங்கிய பதாதைகளை பாத யாத்திரை சென்றோர் ஏந்தியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .