Suganthini Ratnam / 2016 ஜூலை 26 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலையடித்தோணாக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 15 வீடுகள் இன்று செவ்வாய்க்கிழமை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 49 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் 4,000 வீடுகள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,880 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
இம்மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2,168 குடும்பங்களும் வன்னியிலிருந்து அகதிகளாக வந்த 697 குடும்பங்களும்; இந்தியாவிலிருந்து அகதிகளாக வந்த 15 குடும்பங்களும் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 318 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுவரும் நிலையில், பாலையடித்தோணாக் கிராமத்தில் 15 வீடுகளின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. ஒவ்வொரு வீடும் 5 இலட்சம் ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டெல்லி தூதரக செயலாளர் அஜித் குப்தே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மற்றும் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago