2025 மே 03, சனிக்கிழமை

இந்திய புடவை வியாபாரிகள் திண்டாட்டம்; உதவுமாறு கோரிக்கை

Editorial   / 2020 மே 10 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, வ.சக்தி

கொரோனா வைரஸ் தாக்கத்தால் விமான சேவைகள் முடக்கப்பட்டமையால், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு புடவை வியாபாரத்துக்காக வந்த வியாபாரிகள் பலர், மீண்டும் தமது சொந்த நாட்டுக்குச் செல்ல முடியாமல் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

தங்கள் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாமலும், பல அடிப்படைத் தேவைகளன்றி தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பழுகாமம், திக்கோடை கிராமங்களில் தனியார் வீடுகளில் தங்கியுள்ள மேற்படி வியாபாரிகள், அவர்களுக்கான நிவாரணங்கள் ஏதும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அரச உத்தியோகபூர்வ விசாவைப் பெற்று, இலங்கைக்கு வந்து, வீடு வீடாகச் சென்று வியாபாரத்தில் தாம் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த இடர்கால சூழ்நிலையில் வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூலிக்க முடியவில்லை எனவும், தங்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும், அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளரிடம் வினவிய போது, குறித்த இந்திய வியாபாரிகளின் தகவல்களை மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும், நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X