Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 மார்ச் 09 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
இனரீதியான கல்வி வலயங்களை மூடிவிட்டு இன மத பேதமற்ற கல்வி வயங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று புதன்கிழமை (09) விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'கல்வியினூடாக சமாதானம் நிலை நாட்டப்படல் வேண்டுமே தவிர, கல்வியினூடாக இன மத வேறுபாடுகள் வளர்க்கப்படக் கூடாது. கடந்த யுத்தகாலத்தில் இனரீதியான கல்வி வயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்திலும் அம்பாரை மாவட்டத்திலும் இவ்வாறான இன ரீதியான கல்வி வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இன்று யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்பட்டுள்ளது. தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்களும் முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களும் கடமையாற்றுகின்றனர்.
அதே போன்று மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை மற்றும் மட்டக்களப்பு வின்சண்ட் மகளிர் தேசிய பாடசாலை போன்ற பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
அதே போன்று ஓட்டமாவடி தேசிய பாடசாலை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை போன்ற முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இது இனங்களுக்கிடையிலான சமாதனத்தையும் நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் சகோதரத்துவத்தையும் புரிந்துனர்வையும் கட்டியெழுப்பக் கூடிய சிறந்த நடவடிக்கையாகும்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'இந்த நாட்டில் யுத்தத்துக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் எவ்வாறு கல்வியில் இனரீதியான பாகுபாடு இருக்கவில்லையோ, அதே நிலை மீண்டும் உருவாக்கப்படல் வேண்டும். கல்வி ரீதியாக இனங்களுக்கிடையிலான சமாதானத்தை கட்டிவளர்க்க வேண்டும். அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago
7 hours ago