Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
வா.கிருஸ்ணா / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய சூழ்நிலையில் இனவாத மனநிலையினை மாற்றி, நல்லிணக்க சிந்தனைகளை அனைவரும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை கௌரவித்தலும் கலைஞர் கௌரவிப்பும் இன்று (08) நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த காலத்தில் இனவாத சிந்தனைகளை வளர்த்துக்கொண்டதன் காரணமாக, பாரிய அழிவினை நாங்கள் சந்தித்துக்க வேண்டியேற்பட்டது.
இந்த நாடு ஒரு இலங்கையாக பல்லினம்கொண்ட இலங்கையாக வாழும் அந்த மனப்பான்மையினை இளைஞர்கள் பெற்றுக்கொள்ளவேண்டும்.அவர்களை அந்த வழியில் கொண்டுச் செல்வதற்கு பெரியவர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
இந்த நாடு எப்போது எல்லாம் பற்றி எரிந்தது என்று அனைவருக்கும் தெரியும் அவ்வாறு பற்றி எரிந்தப்போதெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் யார்?
ஒரு குழந்தையினை ஈன்று எடுப்பதற்கு ஒரு தாய் எவ்வளவோ வேதனைப்படுகின்றாள். ஒரு குடும்பம் எவ்வளவு கஸ்டங்களை எதிர்கொள்கின்றது. நாங்கள் எத்தனை உயிர்களை இந்த நாட்டில் நாசமாக்கியுள்ளோம். இவையெல்லாம் கவனமாக சிந்திக்காத காரணத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளாகும்.
இன்று இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ஒவ்வொருவரும் முடிந்தவரை நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் சிந்தியுங்கள்.
தமிழ், சிங்களவர், முஸ்லிம் என்றுதான் இப்போதும் சொல்லிக்கொண்டுள்ளோம் இந்த மனப்பான்மையினை நாங்கள் மாற்றவேண்டும். இந்த சின்னஞ்சிறுதீவில் இத்தனை பேதமையுடன் வாழ முடியாது.
எங்களுக்குள் இருக்கின்ற குரோதங்களை தூக்கியெறிந்துவிட்டு. நல்லசிந்தனையை மாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என,அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
32 minute ago
33 minute ago