Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2020 மே 08 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளின் இயல்பு நிலை, இம்மாதம் 11ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்பவுள்ள நிலையில், அது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (08) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணியின் தலைவியுமான திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தா, இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் திருமதி க.கலாரஞ்சினி, அரச, தனியார் போக்குவரத்து பொறுப்பதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
ஊரடங்கு தளர்த்தப்பட பின்னர் மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டன.
இதன்படி, கிழக்கு மாகாணத்துக்கு மட்டும் போக்குவரத்துகளைக் கட்டுப்பாடுகளுடன் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதுடன், வெளி மாவட்டங்களுக்கு அலுவலகத்துக்குச் செல்லும் பொதுமக்கள், பொதுச் சுகாதார பரிசோதகரின் அனுமதியைப் பெற வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட போக்குவரத்துகளை, வாழைச்சேனை வரையில் மட்டுப்படுத்தவும் பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நடவடிக்கைகளை படிப்படியாக வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை முன்னெக்கவும் கிளினிக் வருவோருக்கு தற்போதுள்ள நடைமுறைகளைப் போன்றே வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் நடைமுறைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
உணவு விடுதிகள் திறக்கப்படும்போது, அங்கு பொதிகள் மூலமான விற்பனைக்கு மட்டும் அனுமதி வழங்குதல் எனத் தீர்மானிக்கப்பட்டது.
சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல், அநாவசிய வெளி நடமாட்டங்களை கட்டுப்படுத்தல், அலுவலகங்களில் சுகாதார நடைமுறைகளை பேணுதல் போன்ற செயற்பாடுகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
2 hours ago
3 hours ago