2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இருவேறு விபத்துகளில் இருவர் பலி; மூவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 21 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், கனகராசா சரவண-ன், எஸ்.சபேசன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இருவர் பலியானதுடன்,  மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

செட்டிபாளையம் பிரதேசத்தில் மட்டக்களப்பு -கல்முனை வீதியூடாக நேற்று வியாழக்கிழமை அதிகாலை பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியதில், மோட்டார் சைக்கிள் சாரதி பலியாகியுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்துவந்தவர் படுகாயமடைந்துள்ளார்.

கோடைமடுப் பிரதேசத்தைச் சேர்ந்த மா.டினேஸ்குமார்  (வயது 19) என்பவரே இந்த விபத்தில்  பலியாகியுள்ளார்.
மட்டக்களப்பு தாந்தாமலை கோவில் உற்சவத்தையிட்டு புதன்கிழமை (20) இரவு தனது 04 நண்பர்களுடன் 02 மோட்டார் சைக்கிள்களில் கோவிலுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்துச் சம்பவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானைப் பகுதியில் புதன்கிழமை (20) நள்ளிரவு கொழும்பு -மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலிருந்து  கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த சொகுசு வாடகை பஸ்ஸும் வெலிக்கந்தைப் பிரதேசத்திலிருந்து திருகோணமலைக்கு கோழிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியும் நேருக்குநேர் மோதி இந்த விபத்துச் சம்பவித்ததாக பொலிஸார் கூறினர்.  
இந்த விபத்தில் லொறியின் சாரதியின்  பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயரிழந்துள்ளார்.

இதேவேளை, பஸ் சாரதி சாரதியும் லொறியில் உதவியாளராகப் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X